பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகும் படம் “கிங் ஆஃப் கோதா”. துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, கோகுல் சுரேஷ், ஷபீர் கல்லரக்கல், பிரசன்னா, அனிகா சுரேந்தர், நைலா உஷா போன்ற நடிகர்களின் பங்களிப்பில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகமெங்கும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை துல்கரின் வேஃபேரர் ஃபில்ம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கடந்த சில வருடங்களில் துல்கர் நடித்த படங்கள் அனைத்தும் பல மொழிகளில் வெளியாகி பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இதை தவறாமல் செய்து வருகிறார் அவர். சீதா ராமம், குருப், சுப் போன்ற பான் இந்தியா படங்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக இவரின் மார்க்கெட் நிலையும் சற்று உயர்ந்துள்ளது.
ஆம், மூன்று படங்களின் தொடர் வெற்றியால் இவரின் சம்பளம் இந்த படத்தில் 8 கோடிகள் என தெரிய வந்துள்ளது. மேலும், “கிங் ஆஃப் கோதா” வெளியான பிறகு இந்த டீசர், டிரெய்லர் போன்ற அனைத்துக்கும் கிடைத்த வரவேற்பு குறையாமல் இருக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்துள்ளது.
இதற்கிடையில், துல்கர் சல்மான், சூரியாவுக்கு வில்லனாக நடிக்க போவதாகவும் அது சூரியா 43 படத்தில் தான் தகவல் பரவி வருகிறது. இது நிகழ்ந்தால் துல்கர் ரீச் இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.