Mnadu News

6 ஆண்டுகளில் 183 என்கவுன்ட்டர்கள்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த அத்தீக் அகமது கொலை உட்பட உ.பி. என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு, உ.பி மாநில அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தது.இதற்கிடையில், மனுதாரர் விஷால் திவாரி, உத்தரப் பிரதேச என்கவுன்ட்டர்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றார்.அப்போது உ.பி. அரசு தரப்பில், மாநில அரசு ஏற்கெனவே நீதி விசாரணைக் குழு அமைத்துள்ளது என்றார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம், அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

Share this post with your friends