சென்னை பயணிகள் வசதிக்காக இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப்பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்கமாக இன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலியாக மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.