Mnadu News

708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்: தமிழக அரசு அரசாணை.

கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் மொத்தம் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மருத்துவ நிலையங்களுக்கு 180 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற இலக்கினை தமிழ்நாடு எட்டும் என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends