தமிழ் திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி .இவர் தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார்.
இதுவரை இந்த படத்தின் 6 போஸ்டர்கள் ரசிகர்கள் ரசிக்கத்தக்க வண்ணம் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் 7 வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் நடிகர் ஜெயம் ரவி நாயகி சம்யுக்தவுடன் இருக்கிறார். இது ஆதாம், ஏவல் ஆகியோர் போலவும் தோற்றமளிக்கிறது. இதன் மூலம் இந்த படத்தில் 2 நாயகிகள் நடிப்பது உறுதியாகியுள்ளது.