Mnadu News

90’ஸ் கீட்ஸின் நோஸ்டால்ஜிக் நோக்கியா!!

90’ஸ் கிட்களிடையே பிரபலமாக இருந்த நோக்கியா நிறுவனம் சமீபத்தில் அதன் பட்டன் மற்றும் ஃபிலிப் டைப் மாடல் மொபைல்களை ரீமாடல் செய்து வெளியிட்டுள்ளது. அவை டெக் சந்தையில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. என்னதான் ஸ்மார்ட் போன்கள் அதிகம் பெருகி விட்டாலும் இன்றளவும் நோக்கியா 1100 மொபைல் என்றால் 90’ஸ் கிட்ஸ்களுக்கு அலாதி பிரியம். அதன் உழைக்கும் தன்மை உறுதி என அதற்கு பல காரணங்களை சொல்லலாம் அந்தளவுக்கு இந்தியாவில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்கள் பிரபலம். 

நோக்கியா போன் என்பது தொலைபேசி வரிசையில் தாய்வீடு போன்றது என்றே கூறலாம். அந்தளவு இந்தியர்களிடம் பெரிதளவு அறிமுகமானதும், பரீட்சியம் ஆனதும் நோக்கியா தான். நோக்கியாவில் விளையாடிய ஸ்னேக் கேம் விளையாடாத 90’ஸ் ஹிட்ஸ்களே இருக்க முடியாது.எத்தனை முறை கீழே விழுந்தாலும் தண்ணீரில் விழுந்தாலும் சிறிதும் சலிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். சற்று சிந்தித்தால் நோக்கியா இந்திய சந்தையை ஆக்கிரமித்த காலத்தில் மொபைல் போன் மூலம் அவ்வளவு பாதிப்பு இருந்ததில்லை.

‘நோக்கியா என்றாலே இந்த போன் தான்’ என்று கூறும் அளவுக்கு பிரபலமான Nokia 1100 மாடலை 2007ல் வெளியிட்டது நோக்கியா 1 வினாடிக்கு 15 நோக்கியா போன் விதம் 250 மில்லியன் 1100 மாடல் நோக்கியா போன் விற்று தீர்ந்தது. இந்த சாதனையை இன்று வரை எந்தவொரு போனாலும் நெருங்கக் கூட முடியவில்லை என்பதே உண்மை. மேலும் இந்த போனின் வலிமைக்கு, எந்தவொரு விலை உயர்ந்த ஃபோனாலும் ஈடு கொடுக்கவே முடியாது என்பதும் நாம் அறிந்த உண்மை.

2008ல் உலகின் 218 நாடுகளில் மிக பிரபலமாக இருந்த ஒரே போன் நோக்கியா. ஒரு நாளுக்கு 1.3 மில்லியன் மொபைல்கள் என்ற அளவுக்கு விற்பனையில் உலக சாதனை படைத்திருந்தது Nokia. அதே ஆண்டில் மியூசிக் பிளேயருடன் கூடிய தனது முதல் மொபைல் மாடலை வெளியிட்டது நோக்கியா. நோக்கியா மாடல்களில் 4 என்ற நம்பரே இருக்காதாம். சொல்லப்போனால் நோக்கியாவில் 4 என்ற எண் தடை செய்யப்பட்ட நம்பராம். ஏனென்றால் பெரும்பாலான ஆசிய நாடுகளில் 4 என்ற எண்ணை ஒரு அதிஷ்டமில்லாத  நம்பராகத் தான் பார்க்கிறார்களாம்.

இன்று எத்தனை பாடல்கள் வந்தாலும், ‘உலகின் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த ஒரு பாடல்’ என்று ஒன்று இருக்கிறது என்றால், அது Nokia Tune தான். இந்த டியூனை கிரான் வால்ஸ் (Gran Vals) என்ற ஸ்பானிஷ் கிட்டாரிஸ்ட் தான் இசைத்தாராம்.

நோக்கியாவின் பிரபல பாம்பு கேம் (snake game) 2010களில் ‘உலகின் அதிக மக்களால் விளையாடப்பட்ட கேம்’ என்ற சாதனையையும் படைத்திருந்ததாம்.

இது குறித்து பேசிய எச்எம்டி-யின் துணை தலைவர் சன்மிட் சிங்க் அவர்கள் தற்போது இளைஞர்கள் பலரும் கூட இது போன்ற பட்டன் மாடல் மொபைல்களை விரும்புகிறார்கள். இந்த புது மாடல் வெளியீட்டிற்கு பிறகு இளையோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். எல்லா வயதினரை சேர்ந்தவர்களும் இந்த மொபைலை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.இந்தியாவில் வெளியானது நோக்கியாவின் புதிய ஃபீச்சர் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. 

ஸ்மார்ட் போன் வளர்ச்சியில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் வந்து விட்டன. இதில் கரைந்து போன நோக்கியா நிறுவனம் தற்போது மீண்டும் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபிலிப் மாடல் மொபைல் நமக்கு நமது குழந்தை பருவத்தையே நியாபக படுத்துவதாக உள்ளது. அப்படி என்ன அந்த மொபைலில் உள்ளது என்று பார்க்கலாம்.

நோக்கியா 2660 ஃபிலிப் போன் (Nokia 2660 Flip), இதன் விலை 4,699 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் கிடைக்கிறது, கருப்பு நீலம் சிவப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.1450 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. 48MB ரேம் + 128MB சேமிப்பு வசதியும், 2.8இன்ச் டிஸ்பிளே மற்றும் பெரிய பட்டன்கள், எமெர்ஜெண்சி பட்டன் வசதி, 0.3MP பின்பக்க கேமரா போன்றவைகள் இதின் சிறப்பம்சங்கள் ஆகும்.

இது மட்டுமின்றி 1100 போலவே ஒரு மாடல் மொபைலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா 110 இன் (Nokia 1100) விலை 1,699 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் கிடைக்கிறது. சார்க்கோல், சியான், ரோஸ் கோல்ட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 1000 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. 4MB ரேம் + 4MB சேமிப்பு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8000 பாடல்கள் வரை பதிவுசெய்யலாம்.

நோக்கியா 3310, இதன் விலை 3,899 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் கிடைக்கிறது. மஞ்சள், நீலம், க்ரே, சிவப்பு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 1200 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. 16MB ரேம் + 16MB சேமிப்பு வசதி, 2.4இன்ச் டிஸ்பிளே மற்றும் பெரிய பட்டன்கள், 2MP பின்பக்க கேமராயும் உள்ளது.

நோக்கியா 8210 4ஜி இந்தியா வெளியீடு இறுதியாக அதன் புதிய பட்ஜெட் 4ஜி போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பட்டன் போனான நோக்கியா 8210 4G பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தது. நோக்கியாவின் இந்த அற்புதமான பட்டன் 4ஜி போன் இரண்டு வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை சிம் ஆதரவு உள்ளது. இது சீரிஸ் 30+ இயங்குதளம் வாயிலாக வேலை செய்கிறது. இதில் 3.8 இன்ச் QVGA டிஸ்ப்ளே உள்ளது. புதிய நோக்கியா 4G போனில் ப்ளூடூத் 5.0, நிறுவனத்தின் பிரபலமான பாம்பு விளையாட்டு ஆகியவற்றுடன் வருகிறது.  

Share this post with your friends