Mnadu News

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவின் 98ஆவது பிறந்த நாள்- திமுக தலைவர் நேரில் சென்று வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவின் 98ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.

சங்கரய்யாவிற்கு சால்வை அணிவித்த ஸ்டாலின், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Share this post with your friends