டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லீ மெரிடியன் ஓட்டல் செல்வதற்காக டாக்ஸிக்கு காத்திருந்தபோது அதன் ஓட்டுநர் பேசிய இந்தி மொழி , 60 வயதான கனடா விமானி முகமது மெஹ்து கன்ஸன்ஃபானி-க்கு புரியவில்லை.
உடனே அருகில் இருந்த மற்றொரு டேக்ஸி ஓட்டுநரிடம் போனை கொடுத்து தகவல் பரிமாறக் கோரியபோது தானே 100 ரூபாய்க்கு உரிய இடத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி ஏற்றியதாகவும், நம்பி ஏறிய பின் ஏற்கெனவே காரில் இருந்த மூவருடன் சேர்த்து மிரட்டி தன் ஏடிஎம் கார்டு, அதன் பாஸ்வேர்ட், இந்திய மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் பணம், 20 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் உள்ளிட்டவற்றை பறித்து பாதி வழியில் மேம்பாலம் மீது நள்ளிரவு இரண்டே கால் மணிக்கு இறக்கிவிட்டுச் சென்றதாக புகாரளித்தனர்.
விமானியின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது .