Mnadu News

சர்ச்சையில் சிக்கிய “பிகில்” விஜய் …

தெறி, மெர்சல் படங்கள் அடுத்தபடியாக அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். அவருக்கு கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதை கண்டுகளிக்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி நேற்று இணையத்தில் கசிந்த ஒரு வீடியோவில், நடிகர் விஜய் பைக்கில் செல்வது இடம்பெற்றிருந்தது. சில வினாடிகளே உள்ள அந்த வீடியோவில் பைக்கில் சென்றபடி ரசிகர்களை பார்த்து கை அசைக்கும் விஜய் ஹெல்மெட் அணியாமல் செல்வதும் பதிவாகியிருந்தது.விஜய் தலையில் ஹெல்மட் அணியாமல் இருப்பதை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் சிலர் அஜித்துடன் ஒப்பிட்டு விஜய் ஹெல்மெட் அணியாதது குறித்து சுட்டிக்காட்டியுளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends