பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடுத்துள்ளார் .
நளினியின் கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பரோலை நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .ஜூலை 25ம் தேதியிலிருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது .மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More