Mnadu News

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ள நிலையில், சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செப்டம்பர் 2ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இந்து அமைப்புகளும், கோயில் நிர்வாகிகளும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது வழக்கம். குறிப்பாக சென்னையில் நிறுவப்படும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் கடலில் கரைக்கப்படும்.

விநாயகர் சிலைகளை வடிவமைப்பதற்கும், நிறுவுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. 10 அடிக்கு மேல் சிலைகள் இருக்கக் கூடாது, ரசாயன பூச்சு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில்,விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை கொசப்பேட்டை பகுதியில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More