அட்லீயின் அட்டகாச இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத தளபதி 63 ஆவது படத்தின் படப்பிடிப்பில் தற்போது விஜய் நடித்து வருகிறார். அட்லீ விஜயின் கூட்டணி இதுவரை வெற்றிகரமாக இருந்த வந்த நிலையில் இந்த படமும் வெற்றி பெற படக்குழுவினர் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது . ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளி வர இருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பாக சென்னையின் பின்னி மில்லில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படைப்பிற்காக நேற்று சென்னையின் ஒரு கடற்கரையில் பலத்த பாதுகாப்புடன் நடந்து வந்தது. கடற்கரை என்பதால் கூட்டம் அதிகாகமாக இருக்கும் .அதிலும் நம்ப தளபதியின் படப்பிடிப்பு நடக்குதுன்னா கூட்டத்துக்கு பஞ்சமே இருக்காது .மேலும் நேரம் அதிகரிக்க கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த கூட்டத்தை லேசான தடியடி மூலம் கலைத்தனர் .இந்த தடியடியில் கூட்டத்தில் இருந்த 2 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More