தமிழ் திரையுலகில் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை காவேரி. ஒரு சில திரைப்படங்கள் மட்டும் நடித்த இவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதன் பின் சின்னத்திரையில் சீரியல் மூலம் முன்னணி பிரபலமாக வளம் வந்தார் . பல சீரியலில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே இருந்து சிறப்பான நடிப்பின் மூலம் நிறைய ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை காவேரி .
உதாரணமாக இவர் நடித்த மெட்டி ஒலி , தங்கம் போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவை . குண்டாக இருந்து கொண்டு சீரியல்களிலும் வெற்றி கண்ட காவேரி சிறிது காலம் எதிலும் நடிக்காமல் இருந்தார் . இந்நிலையில் சமீப காலமாக அவரது உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக காணப்பட்டார் .
இவரது இந்த உடல் மெலிவுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் அவரே பயந்து போய் மருத்துவரிடம் சென்றார் . மருத்துவர் அவருக்கு உடல் அளவில் எந்த குறையும் இல்லை என்றும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினார் . அதே போல் நான் முன்பை விட சுறுசுறுப்பாகவும் இருக்கேன் என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார் .