தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு உண்டு எனலாம். பல வருடங்களுக்கு பிறகு இதே கூட்டணி இணைந்து உருவாக்கி உள்ள படம் தான்
“நானே வருவேன்”. கலைப்புலி தாணு பிரம்மாண்ட தயாரிப்பில் இப்படம் உருவாகி உள்ளது.
இதில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் நடித்து உள்ளனர். இயக்குனர் செல்வாவின் ஆஸ்தான கம்போசர் யுவன் தான் இந்த படத்துக்கும் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபமாக முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான “ரெண்டு ராஜா” பாடல் இன்று வெளியாகி உள்ளது. தனுஷ் எழுதி பாடி உள்ள இப்பாடல் இணையத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் 29 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.