சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெற தவறியது என்றே சொல்ல வேண்டும். அதே போல நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் எதிர்பார்த்த வெற்றியை பூர்த்தி செய்ய தவறியது.
இருவருக்குமே கட்டாய வெற்றி தேவைப்படும் சூழலில் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி வரும் படம் “ஜெயிலர்”. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 அன்று சென்னை ராயப்பேட்டையில் துவங்கியது. அங்கு படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இப்படத்தின் காட்சிகள் எண்ணூர் போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படத்தின் இன்னொரு ஃபோட்டோ ஒன்று லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே, ராயப்பேட்டையில் ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஒரு ஃபோட்டோ லீக் ஆனது குறிப்பிடதக்கது.
இப்படம் அடுத்த வருட தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.