தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ,தன்னுடைய சொந்த ஊரான காவல்கிணறு ஊராட்சியில் ஒரு பகுதி நேர நியாயவிலைக்கடையை இன்று திறந்ததற்கு காவல்கிணறு ஊரை சுற்றி இத்தனை பேனர்களா என்று மக்கள் புலம்ப தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் இவர், தமிழக சபாநாயகராக பதவியேற்று 16 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான காவல்கிணறு ஊராட்சியில் அவர் செய்துள்ள நலத்திட்டபணிகள் என்னவென்று கூறமுடியுமா? ஏன்று கேள்வி எழுந்துள்ளது. . மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன், வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க, காவல்கிணறு ஊராட்சியில் அமைந்துள்ள சபாநாயகரின் சொந்த கிராமமான லெப்பைகுடியிருப்பிற்கு 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் இன்று வரை கிடப்பில் போடபட்டுள்ளது. அதை நடைமுறைபடுத்த அவர் எடுத்த முன்எடுப்பு என்ன என்று பாரதிய ஜனதா கட்சியின் வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தலைவர் அருள் ஜெக ரூபர்ட் கேட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More