எப்சிஎல் எனப்படும் திருவாங்கூர் உரங்கள், வேதிப்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர்; பணியின்போது மரணமடைந்தார். ஊழியரின் மனைவி, வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை. அதைத் தொடர்ந்து. கருணை அடிப்படையில் வேலை தரக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்றம், கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திடீரென்று ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல என்று கூறி உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More