மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், சஞ்சய் ரௌத், அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ரௌத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்தனர். பின்னர், மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.இந்நிலையில், நேற்றுடன்; நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் அதே நாள் நடைபெறவுள்ளது.