மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்படுகின்றன. இரண்டாம் நாளான இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் இயக்கவியலில் பணியாற்றியதற்காக அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜெயிலிங்கர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More