Mnadu News

கூகுளின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்: pixel 7 மற்றும் 7 ப்ரோ சிறப்பம்சங்கள் என்ன?

கூகுள் நிறுவனதிற்கு சொந்தமான புதிய ஸ்மார்ட்போன் மாடலான Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro போன்களை இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கூகிள் நிறுவனத்தின் I/O 2022 டெவலப்பர் மாநாட்டில் (Goggle Developer Meet) Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் மாடல்களை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதை குறித்து அறிவித்தது.

இந்த போனை பற்றிய தகவல்கள் பெரிய அளவு வெளிவரவில்லைஎன்றாலும், பிக்சல் 7 ப்ரோ அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது சிறிய மேம்படுத்தல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.  கூகிள் ஸ்மார்ட்போனுடன் டென்சர் ஜி 2க்கு (Tensor g 2) மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முந்தய ‘Tensor G’ சிப் ஒப்பீடு செய்து பார்த்தால் கூடுதல் 10 சதவிகிதம் அதிக திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இதில் ‘Mali G78’ இருப்பதால் கூடுதலாக 20 சதவிகிதம் திறன் குறைந்த பேட்டரி மூலம் கிடைக்கும். ‘Janeiro’ எனும் புதிய ‘TPU’ உள்ளது. ‘Google’ மற்றும் ‘Samsung’ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த சிப் ஆகும்.

மே மாதம் கூகுள் நிறுவனம் Pixel 7 மற்றும் 7 Pro ஆகிய போன்களின் டிசைன் மற்றும் சில விவரங்களை வெளியிட்டது. தற்போது அந்த இரு போன்களையும் கூகுள் நிறுவனம் இன்று நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ‘Made By Google’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யவுள்ளது.

Google Pixel 7 Pro மாடல் 75,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு போன்களிலும் 8GB RAM மற்றும் 12GB RAM LPDDR5X memory இடம்பெற்று உள்ளது. இவை 128GB மற்றும் 256GB ஆகிய இரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் அதிக பேட்டரி திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் என்று தெரிகிறது. இதில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது.

இரு போன்களிலும் 50MP கேமரா  இருக்கும். ஆனால் இதன் 7 Pro மாடல் கூடுதலாக 48MP Telephoto lens கொண்டிருக்கும். ஆனால் Pixel 7 ஒரு 12MP UltraWide Lens மட்டுமே கொண்டிருக்கும்.  7Pro மாடலில் புதிய இரண்டு கேமரா வசதி இருக்கிறது. ‘Cinematic Mode’ மற்றும் ‘Macro Focus Mode’ என இரண்டு மோட் உள்ளது.

Pixel 7 48,600 மற்றும் 7 Pro 72,900 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சீரிஸ் போன் தற்போது அறிமுகம் ஆகவுள்ளதால் ‘Pixel 6a’ மாடல் போன் 34,199 ரூபாய்க்கு   விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends