சுந்தர் சி படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. எந்த காலத்துக்கும் பொருந்தும் அளவுக்கு இவரின் நகைச்சுவை காட்சிகள் இருக்கும். அதே போல பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.
தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் “காஃபி வித் காதல்” படத்தை இயக்கி முடித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் யூடியூப் இல் டிரெண்ட் ஆன நிலையில், தற்போது படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது.
யுவன் இசையில் ஏற்கனவே வெளியான தியாகி பாய்ஸ், பேபி கேர்ள், ரம் பம் பம் பாடல்கள் இணையத்தை கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
ஜுக்பாக்ஸ் லிங்க் : https://youtu.be/NH0UjBn_Cxc