தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா” தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் சாதி,மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு விபூதி பிரசதமாக வழங்கப்பட்டது. மேலும் மதநல்லிணக்கத்தினை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற திருவிளக்கு பூஜையிலும் ஏரளமான மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலேயே இந்த ஒரே ஒரு தர்ஹாவில் மட்டும் தான், இந்துக் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது என்பது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.