ராமநாதபுரம்;
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் மத்திய உப்பு மற்றும் ரசாயன ஆராய்ச்சி நிலையத்தில் கடல்பாசி மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கான 3 நாட்கள் கடல்பாசி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் தலைமை ஆராய்ச்சியாளர் முனைவர் வீரகுருநாதன் தலைமையில் தொடங்கியது. ஆராய்ச்சியாளர் சதீஷ் வரவேற்று கடல்பாசி வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/24.jpg)
இதில் ஆந்திரா, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த 35 ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தலைமை ஆராய்ச்சியாளர் வீரகுருநாதன் தெரிவித்தார்.