ஹெச் வினோத் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள கூட்டணியில் உருவாகி வரும் படம் “துணிவு”. தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைக்கும் படம் மற்றும் அஜித்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.
மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர், வீரா, ஜான் கொகென், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் கதை என்பது வங்கி கொள்ளை குறித்து பேசுகிறது. ஏற்கனவே, வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துணிவு படத்தை செதுக்கி வருகிறார் ஹெச் வினோத்.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில், தற்போது அது நிறைவு பெற்றுள்ளது என படக்குழு அறிவித்து உள்ளது. இப்படம் வாரிசு படத்துக்கு போட்டியாக பொங்கல் வெளியீடாக வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.