தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே காலாங்கரை பகுதியில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் தலைமையில் காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த செங்கோட்டையை சேர்ந்த பரமசிவன், விஸ்வநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரசாக் ஆகிய இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 11. ஆயிரத்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரையும் கைது செய்த செங்கோட்டை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More