வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மலையம்பாக்கம் அருகே கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்றும் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் மற்றொருவர் சுதாகர் என்பதும் , காயம் அடைந்தவர்கள் வெங்கடேசன், ராஜவேலு என்று தெரிகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More