இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற மாதம் வெளியாகி உலக பாக்ஸ் ஆபீஸில் பெரிய இடத்தை கைப்பற்றிய இந்திய படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்”. சுமார் 1000 கோடிகளை அள்ளி இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் மக்களை தேச பற்றால் மூழ்க வைத்த படம் இது. இதில் நடிப்பு, இசை, வசனம், பாடல்கள், காட்சி அமைப்பு, கிராஃபிக்ஸ் என அனைத்தும் உலக தரத்தில் எடுக்கப்பட்டு இருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும்
வெளியாக கவனம் ஈர்த்தது. அண்மையில் இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்வாகவில்லை. ஆனாலும், தற்போது ஜப்பான் மொழியில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.