வாடிகன் நிகழ்ச்சி ஒன்றில் போப் பிரான்சிஸ் கலந்துக் கொண்டார். அதில், மொபைல் பயன்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் ஆபாசப் படம் பார்க்கும் தீமையான பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது. உலகில் பல கோடி பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. அவ்வளவு ஏன் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் கூட ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர். மொபைல் உள்ளிட்ட சாதனங்களை நமது வளர்ச்சிக்காக பாசிட்டிவ் முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயேசு நமக்கு கொடுத்துள்ளது தூய்மையான இதயம் ஆகும். இந்த ஆபாசத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More