நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கடைமடை விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீடு நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைமடை விவசாயிகள் சங்கத்தினர் விரைந்து காப்பீடு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழ்நாட்டிற்கு என தனி காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More