குலேபகவாலி, ஜாக்பாட் படங்களின் மூலம் ஒவ்வொரு படத்துக்கும் புதுமையாக திரைக்கதையை அமைப்பதில் இயக்குநர் கல்யாண் ஒரு ஸ்பெஷல் இயக்குநர். இந்த இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும் புதிய முயற்சிகளை இவர் கைவிடுவதில்லை.
தற்போது கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் லீட் டூயல் ரோலில் நடித்துள்ள படம் தான் “கோஸ்டி”. காமெடி வகை பேய் படங்களின் வரிசையில் இதையும் சேர்க்கலாம். இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ராதிகா சரத்குமார், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்து உள்ளனர்.
சாம் சி எஸ் இசையில் விவேக், கு. கார்த்திக் பாடல்களை எழுதி உள்ளனர். இப்படம் விரைவில் திரை அரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டீஸர் லிங்க் : https://youtu.be/DImX45w-qgc