Mnadu News

மனம் மோர்பியாவில் உள்ளது: பிரதமர் மோடி சோக உரை.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் அகடோபர் 31-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தின் கெவாதியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து படேலின் சிலை அருகே நடந்த அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டார்.பின்னர் பேசிய அவர், குஜராத் பால விபத்து நிகழ்வால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தால் குழப்பமடைந்த சக்திகள் இன்றும் உள்ளன. அவர்கள் நம்மை உடைக்கவும் பிரிக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜாதியின் பெயரால் நம்மை எதிர்த்துப் போராட கதைகள் உருவாக்கப்படுகின்றன. மாநிலங்களின் பெயரால் நம்மை பிரிக்க முயற்சி நடக்கிறது. ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் ஒருவரையொருவர் சேர்க்காமல், ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்லும் வகையில் வரலாறு முன்வைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த (முன்னாள்) அரச குடும்பங்கள், நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு புதிய அமைப்புக்காக தங்கள் உரிமைகளை அர்ப்பணித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக இந்த பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது. முன்னாள் அரச குடும்பங்களின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும் என்றார். இதே போல் டெல்லியில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

Share this post with your friends