திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு நேதாஜி தெரு, சுந்தரம் தெரு, சுந்தரம் குடி தெரு, பகுதியில் சுமார் 2500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பொதுமக்கள் கலந்து சென்றனர். மேலும் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட உள்ளே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.