Mnadu News

பிலிப்பைன்சை புரட்டி எடுத்த புயல் மழை! பலி எண்ணிக்கை உயர்வு!

நால்கே என்ற பலமான புயல் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை கடந்த வாரம் சூறையாடியது, அதிலும் குறிப்பாக மகுயிண்டனாவ் மாகாணம் பெரிய அளவிலான சேதத்தை சந்தித்தது. இதனால் மரங்கள் வேரோடு சாயிந்து, மின்கம்பங்கள் ஆங்காங்கே சரிந்தன.

அதோடு பல கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏராளமான வீடுகள் மண்ணோடு புதைந்து உள்ளன.

புயல், கடும் மழை, வெள்ளம் போன்றவற்றால் பலி எண்ணிக்கை 85 தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 30 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends