Mnadu News

இந்தூர் – சண்டிகர் இடையே விமானச் சேவை தொடக்கம்.

உள்நாட்டு இணைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்குப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இண்டிகோ நிறுவனம் இந்தூர்-சண்டிகர் இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.இந்த விழாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இந்தூரைச் சேர்ந்த பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அமைச்சர் , இந்தூர் மற்றும் சண்டிகர் இரண்டு ஸ்மார்ட் நகரங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கட்டாயம் பார்க்க வேண்டிய பல சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளன. வரலாறு, வளர்ச்சி மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றைப் பெருமைப்படுத்தும் பிராந்தியத்தின் மையத்தில் இருப்பதால் இந்தூர் இந்தியாவின் இதயப் பகுதியாகும். இது மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இயற்கையின் தனித்துவமான ஒருங்கிணைப்பு, வரலாற்று மற்றும் சமகால கட்டமைப்புகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுள்ளது.
மறுபுறம், சண்டிகர் பிரெஞ்சு கட்டடக் கலைஞர் லு.கார்பூசியரால் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகும். சண்டி மந்திர் கோயிலின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டது. அதோடு, சண்டிகர் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுகிறது என்றார்.

Share this post with your friends