தமிழகத்தின் நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாகையில் லேசாக தூறலாக ஆரம்பித்த மழை வலுக்க தொடங்கி சுமார் 3 மணிநேரமாக வெளுத்து வாங்கியது. எதிரே வரும் வாகனங்கள், மனிதர்கள் தெரியாத அளவுக்கு மிக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மின் விளக்குகளை எரிய விட்டப்படி வாகனத்தை ஓட்டி சென்றனர். மேலும் சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்பொழுது சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.