ஜார்கண்ட் முதல் அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் கல்குவாரியை தன் பெயரில் குத்தகைக்கு எடுத்ததாக ஹேமந்த் சோரன் மீது ஜார்க்கண்ட் முன்னாள் முதல் அமைச்சரும் , பாஜக தலைவருமான ரகுபர்தாஸ் குற்றஞ்சாட்டினார். அதுதொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜார்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்த ஹேமந்த், அதில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More