Mnadu News

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் கார்ல்சனை இந்த வருடம் மூன்று முறை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. ஒலிம்பியாட் போட்டியில் விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.
கடந்த வருடம், தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பெற்றவருமான சி.ஏ.பவானி தேவி, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் உள்பட 35 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருட அர்ஜுனா விருதுக்கு செஸ் வீரர்களான பிரக்ஞானந்தா, பக்தி குல்கர்னி ஆகிய இருவரையும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More