பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல் அமைச்சர்; ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி.யும் வழக்குரைஞருமான நெல்சன் உள்ளிட்டோருடன் முதல் அமைச்சா ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More