வேலூர் மாநகர் மாங்காய் மண்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் கரண்-சிவசத்தி. திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு கருவுற்ற சிவசக்தி தற்போது பிரசவ வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் பழைய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிவசக்திக்கு பெண் குழந்தை பிறந்த சற்று நேரத்திலேயே உயிரிழந்துள்ளது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை, மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக கூறி உயிரிழந்த சிசுவின் உடலுடன் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More