Mnadu News

கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 98 ஏரிகள் 75%-99% , 256 ஏரிகள் 50%-75%, 328 ஏரிகள் 25%-50%, 138 ஏரிகள் 25% கீழ் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்திறையினர் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட இருப்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More