ஐ பி எல் 2019 புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது இடத்திலும் பஞ்சாப் அணி 3 ஆவது இடத்தில தற்போதைய நிலையில் உள்ளது . இந்நிலையில் இந்த 2 அணிகளும் நேற்று நடந்த போட்டியில் மோதிக்கொண்டது .
இந்த போட்டிக்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவர பயிற்சி ஈடுபட்டனர் . அப்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியானது. காயம் பெரிதாக உள்ளதால் அவர் நேற்று நடந்த போட்டியில் பங்கேற்பதே சந்தேகம் என்றும் தகவல் வெளிவந்தது . அதே போல் அவர் நேற்று நடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாட வில்லை .
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு பறிபோகலாம். ஆனால் இருப்பினும் ரோகித் சர்மாவின் காயம் குறித்து அணி நிர்வாகம் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை .