தமிழ்த்திரையுலகில் ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரவணன். இதனை தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கியுள்ளார் .திடிரென்று இவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்துவந்தார் . தற்போது மீண்டும் திரைப்படம் இயக்க களமிறங்கியுள்ளார் இயக்குனர் சரவணன் . அதன்படி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளார் . இந்நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியின் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.