உலகையே ஆச்சார்யப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெருமை பட வைத்த விஷயம் என்றால் அது பிளாக் ஹோல் தான் .நாம் பள்ளிப்பருவதில்லையே இது பற்றி படித்திருப்போம் .பிளாக் ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளைக்கு அர்த்தம் என்னவென்றால் இவற்றின் எல்லைகுட்பட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
மேற்குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது.
இப்படி ஒரு சிறிய ஒளி கூட செல்ல முடியாத கருங்குழி(பிளாக் ஹோல் ) இது வரை யாரும் பார்த்ததில்லை .கற்பனையில் மட்டும் இருந்த இந்த கருங்குழி(பிளாக் ஹோல் ) புகைப்படத்தை நம் கண்முன் நிறுத்தினர் . EHT என்று சொல்லப்படுகின்ற ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் அமைப்பை சார்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் யாரும் இதுவரை செய்திடாத சாதனையை படைத்தது அசத்தியுள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.
இந்த அறிய வகை சாதனை குறித்து பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் கூறுகையில் ,இந்த கருந்துளை சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு எடை கொண்டது . அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய கருந்துளை இதுவே ஆகும் . ஆனால் இந்த கருந்துளை (பிளாக் ஹோல்) புகைப்படம் எப்படி எடுத்தார்கள் தெரியுமா ?
விண்வெளி ஆராய்ச்சி குழுவான EHT பூமியிலிருந்து கிட்டத்தட்ட 8 தொலைநோக்கிகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.ஆனால் இதில் சிறிய அளவில் ஒளி செல்ல முடியாமல் இருந்த போதிலும் ,தொழில் நுட்ப உதவியால் தற்போது புகைபடம் எடுத்து நம் கண்முன் காட்டி சாதனை படைத்துள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் .