பொன்ராம் இயக்கத்தில் வெளியான முதல் இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. அதற்கு அடுத்து அவர் எடுத்த சீம ராஜா படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் கட்டாய வெற்றியை பதிவு செய்ய பொன்ராம் இயங்கி வருகிறார். விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக மிரட்டும் “டிஎஸ்பி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
டி இமான் இசையில் பாடல்கள் உருவாகி வரும் நிலையில், இன்று மாலை ஐந்து மணிக்கு இமான் இசையில், செந்தில் கணேஷ், உதித் நாராயண், மாளவிகா சுந்தர் ஆகியோர் குரல்களில், விஜய் முத்துப்பாண்டி வரிகளில், “நல்லா இருமா” என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.