கடந்த செவ்வாய் கிழமை அன்று சென்னை மற்றும் கொல்கத்தா இடையே நடந்த போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் அபார பந்து வீச்சும், எப்போதும் பௌலர்களை துவம்சம் செய்யும் ரஸ்ஸல் சற்று தடுமாறியது , பிட்ச் சரி இல்லை என பல விஷயங்கள் ,இந்த ஆட்டத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டாலும் இதை எல்லாம் விட அதிக பேசு பொருளாக இருந்தது இயக்குனர் அட்லீ.
அட்லீ தற்போது தளபதி படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார் , இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக கிசுகிசுக்கபட்டது. பின்பு அது வதந்தி என படக்குழு மறுத்தனர் , ஆனால் திடீரென அட்லீ சென்னை மற்றும் கொல்கத்தா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் அட்லீ ஷாருக்கான் பக்கத்தில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவ அனைவரும் அட்லீயை கிண்டல் அடித்தனர்,அவரின் படங்கள் பற்றி கிண்டல் அடித்ததார்கள் அதற்கு நம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது .ஆனால் சிலர் அவரது நிறத்தை கிண்டலடித்து பதிவிட்டிருந்தனர். இது நம் மனநிலையை காட்டுகிறது நிறத்தை முடிவு செய்வது நாம் கிடையாது. அதை கூட தெரிந்து கோலத்தை சிலர் அவர் உருவத்தை பற்றியும், நிறத்தை பற்றியும் கிண்டல் அடிப்பது அவர்களின் சிறிய அறிவையே காட்டுகிறது.
அட்லீ சிறுவயதிலேயே இயக்குநராகி மூன்று வெற்றி படங்கள் கொடுத்தவர். அதில் ஒன்று 100 கோடி வசூலையும் மற்றொரு படம் 200 கோடி வசூலையும் குவித்துள்ளது , காசு கொடுத்து படத்தை பார்க்கும் அனைவருக்கும் படத்தை விமர்சிக்கவும் அதன் இயக்குனரை விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது. ஆனால் உருவத்தை விமர்சிக்கும் உரிமையை யார் கொடுத்தது.
ஆனால் அட்லீ என்னவோ அடுத்தடுத்து முன்னேறி கொண்டுதான் இருக்கிறார். கிண்டல் செய்பவர்களோ அடுத்த நபர்களை கிண்டல் செய்ய கிளம்பி விடுகின்றனர். இப்பொது அட்லீ ஷாருக்கானுடன் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர் .
எப்போதும் troll செய்பவர்கள் சில வரையறையும் வரம்பையும் மீறாமல் இருப்பது நல்லது.