Mnadu News

ஜிப்ரான் இசையில் வெளியான “யாரோ யாரோ இவ”! மண் வாசம் சொட்டும் இசை கொடுத்துள்ள ஜிப்ரான்!

வாகை சூடவா படத்தில் துவங்கிய இசை பயணம் இசையமைப்பாளர் ஜிப்ரானை நல்ல இசைஞராக இந்திய சினிமாவுக்கு அறிமுகம் செய்தது.

தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றி வருகிறார் ஜிப்ரான். இந்த நிலையில் மீண்டும் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகி உள்ள “பட்டத்து அரசன்” படத்தின் மூலம் இவர்கள் இணைந்துள்ளனர். வரும் 25 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது.

யாசின் நிசர் குரலில், ஜிப்ரான் இசையில், மணி அமுதவன் வரிகளில் “யாரோ யாரோ இவ” என்கிற இந்த பாடல் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this post with your friends