Mnadu News

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பரூக் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ஸ்ரீநகரில் தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, எனது உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பரூக் அப்துல்லா கூறினார். தேசிய மாநாட்டு கட்சியின் அடுத்த தலைவராக அவரது மகனும் முன்னாள் முதல் அமைச்சருமான உமர் அப்துல்லா தேர்வு செய்யபட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Share this post with your friends