தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18ற்கு மட்டும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. சூலூர்- பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம்- பி.சரவணன், ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.