மக்களவை தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரையில் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று முதல்தலைமுறை வாக்காளர்களிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றும். கட்சிக்குகளுக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நண்பர் என்ற முறையிலே சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன் என்றும் கூறினார்.
இதேபோல் கர்நாடகாவில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை வெற்றி பெற செய்யுமாறு நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் “நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் அதன்மூலம் மாற்றம் வர வேண்டும்” என்று நடிகர் ஜி.வி.பிரகாஸும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.