மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இந்த முறை பல சினிமா பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விமரிசித்து வந்த கரு பழனியப்பன், இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கரு.பழனியப்பனின் இந்தப் பிரச்சாரப் பயணம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “இணையத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் கவனிக்கிறேன். எந்தவொரு வேலை செய்ய வெளியே வந்தாலும் எதிர் கருத்து வரத்தான் செய்யும். எந்த வேலை செய்தால் எதிர் கருத்து வராது சொல்லுங்கள்.
எதிர் கருத்து வராமல் இருக்க வேண்டும் என்றால் வேலை செய்யாமல் இருக்க வேண்டும். அக்கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.